பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பான சுகாதார வழிகாட்டல் கல்வி அமைச்சிடம் கையளிப்பு!

Date:

5 ஆம் தரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான சுகாதார வழிகாட்டல்களை கல்வி அமைச்சின் செயலாளரிடம் ஒப்படைத்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

கொவிட் பரவல் காரணமாக பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டன.எனினும், நாட்டில் இதுவரையில் கொவிட் அச்சம் முழுமையாக குறைவடையாத நிலையில், பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது சவாலான ஒரு விடயமாகவே உள்ளது.

இந் நிலையில், பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்காக சுகாதார அமைச்சு தயாரித்த சுகாதார வழிகாட்டி இன்று (21) கல்வி அமைச்சின் செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.அதற்கமைய, தரம் 5 வரையான ஆரம்ப வகுப்புகளை கொண்ட பாடசாலைகளை திறப்பது தொடர்பான வழிகாட்டல்கள் அதில் அடங்கியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...

ஊடக சுதந்திரத்துக்கு நேரடி தாக்குதல்; காசா  ஊடகவியலாளர்களின் படுகொலையை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வன்மையாகக் கண்டிக்கிறது

அல் ஜஸீரா வலையமைப்புக்காக காசா விலிருந்து கடமையாற்றி வந்த சிரேஷ்ட செய்தியாளர்...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி...

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....