பால்மாவின் விலையை அதிகரிப்பதற்கு இதுவரை தீர்மானிக்கவில்லை

Date:

இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கான விலையை அதிகரிப்பதற்கு இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலையை 200 ரூபா வரை அதிகரிப்பது தொடர்பில் வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உபகுழுவிலேயே தீர்மானிக்கப்படும் எனவும் ராஜாங்க குறிப்பிட்டுள்ளார்.

உலக சந்தையில் பால்மா விலை அதிகரிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்து, இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை அதிகரிப்பதற்கு அனுமதிக்குமாறு பால்மா இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் கடந்த ஒரு மாதகாலமாக கோரி வருகின்றன.

விலை அதிகரிக்க அனுமதிக்கப்படாதமையால் அவர்கள் தற்போது இறக்குமதியை மட்டுப்படுத்தி இருக்கின்றனர். அதனால் சந்தையில் கடந்த சில வாரங்களாக பால்மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கின்றது.

இந்த பின்னணியில் பால்மா இறக்குமதி செய்யும் நிறுவனங்களுக்கும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது உலக சந்தையில் பால்மா விலை அதிகரிக்கப்பட்டிருப்பது, கப்பல் கட்டணம் அதிகரித்திருப்பது, ரூபாவுடன் ஒப்பிடுகையில் டொலரின் பெறுமதி அதிகரித்திருப்பது போன்ற காரணங்களுக்கமைய ஒரு கிலோ கிராம் பால்வின் விலையை 350 ரூபா வரை அதிகரிப்பதற்கு அனுமதி கோரியுள்ளனர்.

என்றாலும் சந்தை நிலைமை மற்றும் இறக்குமதி வரி தொடர்பில் நீண்ட கலந்துரையாடலின் பின்னர் ஒரு கிலோ பால்மாவின் விலையை 200 ரூபா வரை அதிகரிப்பது தொடர்பில் கொள்கையளவில் இணக்கப்பாட்டு எட்டப்பட்டுள்ளது.

இருந்தபோதும் பால்மாவுக்கான விலை அதிகரிப்பதற்கு நுகர்வோர் அதிகார சபை இதுவரை அனுமதி வழங்கவில்லை. எதிர்வரும் வாரத்தில் வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உபகுழு இதுதொடர்பாக கலந்துரையாடிய பின்னரே விலை அதிகரிப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...