நாடு திறக்கப்பட்டதன் பின்னர் பொதுப் போக்குவரத்து சேவையை முன்னெடுப்பது தொடர்பான யோசனைகள் சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது.போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதனை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி அனைத்து அரச சேவையாளர்களையும் கடமைக்கு அழைப்பது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.