இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் சர்வதேசப் போட்டி மழையுடனான வானிலை காரணமாக தாமதமாகியுள்ளது .
கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு குறித்த போட்டி ஆரம்பமாகவிருந்த நிலையில், அப்பகுதியில் நிலவும் சீரற்ற காலநிலையினால் போட்டியை ஆரம்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதனால் நாணய சுழற்சி கூட மேற்கொள்ளப்படாத நிலையில், இரு அணிவீரர்களும் விளையாட்டு அரங்கில் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.