தங்களது நிறுவனத்தின் முதல் மின்சார காரை ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் இன்று (29) அறிமுகப்படுத்தியது.உலகின் பிரபலமான முன்னனி ஆடம்பர கார் கம்பனியாக ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் இருக்கின்றது.விலையுயர்ந்த ஆடம்பரக் கார்கள் தயாரிப்புக்கு பெயர் பெற்ற இந்த நிறுவனம் மின்சாரத்தில் இயங்கும் கார்களை தயாரிக்க உள்ளதாக அறிவித்திருந்தது.எரிபொருளுக்கு மாற்றாக மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் தயாரிப்பில் பல்வேறு நிறுவனங்களும் ஆர்வம் காட்டிவரும் நிலையில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் அறிவிப்பு பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அதன் முதல் மின்சார கார் நேற்று (29) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கி.மீ தூரம் வரை பயணிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த கார் முந்தைய ரோல்ஸ் ராய்ஸ் கார்களிலிருந்த அனைத்து விதமான வசதிகளுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த காரின் விலை குறித்த அறிவிப்புகளை அந்த நிறுவனம் வெளியிடவில்லை.இது குறித்து பேசிய அந் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அடுத்த 20 ஆண்டுகளில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தங்களது அனைத்து தயாரிப்புக்களையும் மின்சார வாகனங்களாக மாற்றுவோம் எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.