மேலும் 4 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசி டோஸ்கள் நாளை இலங்கை வந்தடையவுள்ளதாக இலங்கையில் அமைந்துள்ள சீன தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
தனது டுவிட்டரில் பதிவொன்றை மேற்கொண்டு, நாளொன்றுக்கு இந்நாட்டிற்கு கொண்டுவரப்படும் அதிகபட்ச தடுப்பூசி தொகை இதுவென சீன தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, இதுவரையில் சீனாவினால் 22 மில்லியன் தடுப்பூசி டோஸ்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாக சீன தூதரகம் குறிப்பிட்டுள்ளது.