மெகஸின் சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு கையடக்கத் தொலைபேசியை வழங்கிய சிறை அதிகாரிக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த அதிகாரி கொழும்பு – மெகஸின் சிறைச்சாலையிலிருந்து வவுனியா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலை ஆணையாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.