அப்ரா அன்ஸார்.
18 வருடங்களுக்கு பின்பு நியூஸிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஐந்து இருபதுக்கு இருபது போட்டிகள் கொண்ட தொடராக இது அமைந்துள்ளது.முதலாவது ஒரு நாள் போட்டி இன்று இலங்கை நேரப்படி 3 மணிக்கு ராவல்பிண்டியில் ஆரம்பமாக உள்ளது.
பாகிஸ்தான்அணியின் தலைவராக பாபர் அசாம் மற்றும் நியூசிலாந்து அணியின் தலைவராக டொம் லதம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.நியூஸிலாந்து அணியின் அனுபவமுள்ள வீரர்கள் இந்தியன் பிரீமியர் லீக்கில் விளையாட உள்ளதால் அனுபவமற்ற அணியாக இந்த அணி களமிறக்கப்பட்டுள்ளது.கடந்த பங்களாதேஷூடனான தொடரில் பிரகாசிக்க தவறிய இந்த அணி பாகிஸ்தானுடன் சிறப்பாக விளையாடுவார்கள் என நியூஸிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.பலம்பொருந்தியதாக பாகிஸ்தான் அணி காணப்பட்டாலும் அண்மையில் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் மிஸ்பா உல் ஹக் மற்றும் தலைமை பந்து வீச்சு பயிற்றுவிப்பாளர் வக்கார் யூனுஸ் ஆகியோர் பதவி விலகினார்.அதன் பின்பு இந்த இடைவெளியை பூர்த்தி செய்ய பாகிஸ்தான் அணியின் மூத்த வீரர்களான ஷக்லைன் முஸ்தாக் மற்றும் அப்துர் ரஸ்ஸாக் நியமிக்கப்பட்டுள்ளனர்.பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவராக அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்ட ரமீஸ் ராஜா அணியின் வடிவமைப்பில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.