2, 000 ரூபா கொடுப்பனவை பெற தகுதியானவர்கள் மேல் முறையீடு செய்ய சந்தர்ப்பம்!

Date:

அம்பாறை மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தின் கீழ் வருமானத்தை இழந்தவர்களுக்காக, அரசாங்கத்தினால் வழங்கப்படும்  இரண்டாயிரம் ரூபாய் மானியக் கொடுப்பனவு பட்டியலில் பெயர் உள்ளடக்கப்படாதவர்கள், அதனை பெறுவதற்காக மேன்முறையீடு செய்ய முடியும்.

மேன்முறையீடுசெய்வதற்கான விண்ணப்பப்படிவத்தை உரிய முறையில் பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட பிரதேச செயலகங்களில் ஒப்படைக்கலாமென அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி. ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.

இந்த கொடுப்பனவுக்காக அம்பாறை மாவட்டத்திலுள்ள 20 பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்து 46 ஆயிரத்தி 581 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

குறைந்த வருமானமுடைய வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்கள், சமுர்த்தி பெறுவதற்கு காத்திருப்பு பட்டியலில் உள்ளோர் மற்றும் நாளாந்த வருமானத்தை இழந்த குடும்பங்கள் ,சமுர்த்தி நிவாரணம் பெறாத ஆனால் சமுர்த்தி நிவாரணம் பெறத்தகுதியான குடும்பங்கள் ஆகியோர் இந்த கொடுப்பனவை பெறுவதற்கு தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது: ஈரான் திட்டவட்டம்

போர் நிறுத்தம் தொடர்பாக, அமெரிக்காவுடன் எந்தவிதமான சமரசப் பேச்சுவார்த்தையும் நடத்தப்போவதில்லை என...

அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுச் சதிக்கு எதிராக தமிழகத்தில் வெடித்த எதிர்ப்பு: அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஓரணியில்!

இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலால் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி...

உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி...

எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் காரணமாகக் கொண்டு,...