மனித உரிமைகள் பேரவையினால் இலங்கை தொடர்பில் 46/1 என்ற தீர்மானத்தால் நிறுவப்பட்ட அனைத்து வெளிப்புற முயற்சிகளுக்கான முன்மொழிவுகளையும் தாம் நிராகரிப்பதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் இடம்பெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடரில்,இத்தாலியிலிருந்து தொலைகாணொளி வழியாக கலந்துகொண்டபோதே அவர் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.