O/L பரீட்சையில் புத்த மதம், சிங்களம் உட்பட அனைத்து பாடங்களிலும் A தேர்ச்சி பெற்ற முஸ்லிம் மாணவியின் சாதனை சொல்லும் செய்தி! 

Date:

இலங்கையில் க.பொ.சாதாரண தரப்பரீட்சை மூன்று மொழிகளிலும் நடைபெறுகிறது.இதில் பொதுவாக அனைத்து மாணவர்களும் அவரவர் மதரீதியான பாடங்களுக்கு தோற்றுவது வழக்கம்.எனினும் வேறு மதங்களுடைய பாடங்களை தெரிவு செய்து அதில் திறமையை வெளிக்காட்டுகின்ற பல சந்தர்ப்பங்கள் இப் பரீட்சைப் பெறுபேறுகள் மூலம் ஒவ்வொரு வருடமும் அறியக் கிடைக்கிறது.இதன் மூலமாக மாணவர்கள் மத்தியில் அடுத்த மதத்தைப் பற்றிய அறிமுகம் நல்லெண்ணம் மற்றும் தெளிவும் ஏற்படுகின்றது.எனவே நமது நாட்டிலே மதங்களுக்கிடையிலான சகவாழ்வை ஏற்படுத்துவதற்கு அடுத்த மதங்களைப் படிப்பதற்கு மாணவர்களை தூண்டுவது இன்றைய காலகட்டத்தில் இன்றியமையாத தேவையாகும். அந்தவகையில் இம் முறை நடைபெற்ற க.பொ.சாதரண தர பரீட்சையில் தனது திறமையை வெளிப்படுத்திய வெல்லவாய பிரதேச முஸ்லிம் மாணவிக்கு எமது வாழ்த்துக்கள்!

இவ்வாறான மாணவர்கள் ஊக்குவிக்கப்படுவ தோடு மேலும் இவரைப் போன்று ஏனைய மாணவர்களும் வெவ்வேறான மதப் பாடங்களை தெரிவு செய்து கற்க ஊக்குவிக்கப்பட வேண்டும். அதே வேளை இம்மாணவி சிங்கள மொழி மூலம் கற்றதன் மூலமும் அந்த மொழுயின் அவசியம் பற்றிய செய்தியும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. சிறுபான்மையினர் சிங்கள மொழி யையும் பெரும்பான்மையினர் தமிழ் மொழியையும் கற்பது இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் வளர்க்க மிகவும் இன்றியமையாதாகும்.

இந்த முஸ்லிம் மாணவி யார்? 

வெல்லவாய மல்வத்த தேசிய பாடசாலை மாணவி மொஹமட் ஃபரிஸ் ஆயிஷா வின் தாய் ஆமினா. அவரது தந்தை வெள்ளவாயவில் சைக்கிள் பழுதுபார்க்கும் கடை நடத்தி வருகிறார்.

குடும்பத்தில் இரண்டாவதாக இருக்கும் ஆயிஷா தனது வெற்றியைப் பற்றி கூறும் போது,

தேர்வுக்கு முன்பே எனக்கு ஒரு நோக்கம் இருந்தது. நான் ஒரு குறிக்கோளுடன் வேலை செய்தேன்.வினாத்தாள்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஆசிரியர்கள் கடுமையாக உழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். என்ஜினியர் ஆக வேண்டும் என்பது என் எதிர்ப்பார்ப்பு. அதற்காக நான் உயர்தரத்தில் கணிதம் படிக்கத் தயாராகி வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

சாதனை மாணவி ஆயிசாவுக்கு newsnow வின் வாழ்த்துக்கள்!

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...