இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபைக்கு புதிய செயலாளர் நியமனம்!

Date:

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் செயலாளராக உதவி ஆளுநர் ஜே பி ஆர் கருணாரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

2021 செப்டம்பர் மாதம் 15 தொடக்கம் நடைமுறைக்குவரும் விதத்தில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.உதவி ஆளுநர் ஜே .பி ஆர் கருணாரத்ன, அவுஸ்ரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்திலிருந்து வணிக முதுமானிப் பட்டத்தினையும் கொழும்புப் பல்கலைக்கழகத்திலிருந்து பிரயோகப் புள்ளிவிபரவியலில் பட்டப்பின்படிப்பு டிப்ளோமா பட்டத்தினையும் விஞ்ஞானமானி (பௌதீக விஞ்ஞானம்) பட்டத்தினையும் பெற்றுள்ளார்.

இவர் ஐக்கிய இராச்சியத்தின் பட்டய முகாமைத்துவ கணக்காளர்கள் நிறுவனத்தின் (CIMA) சக உறுப்பினரும் இலங்கை சான்றுபடுத்தப்பட்ட முகாமைத்துவக் கணக்காளர்களின் (CMA) இணை உறுப்பினருமாவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

– வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்தியில் பிற்பகலில் மழை

இன்றையதினம் (05) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...