ஈராக்கில் எர்பில் விமான நிலையத்திற்கு அருகில் ஆளில்லா விமான தாக்குதல்!

Date:

ஈராக்கின் வடக்கு பகுதியிலுள்ள எர்பில் (Erbil) சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் ஆளில்லா விமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குர்திஸ் கிளர்ச்சியாளர்களால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த பகுதியில் ஏவுகனை தாக்குதல் நடத்தப்பட்டதாக முதலில் அறிவிக்கப்பட்ட போதிலும் அந்த நாட்டு பாதுகாப்பு தரப்பினர் விடுத்த இரண்டாவது அறிக்கையில் ஆளில்லா விமான தாக்குதலே நடத்தப்பட்டாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. குறித்த பகுதியில் ஆறு வெடிப்பு சம்பவங்கள் பதிவானதாக தெரிவிக்கப்படுகின்றது.எனினும் எர்பில் விமான நிலையத்திற்கு சேதம் எவையும் ஏற்படவில்லை என விமான நிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...