உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டலுக்கு அமைய பாடசாலைகளை ஆரம்பிப்பது அவசியமாகும்!-கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா!

Date:

பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்டு பின்னர் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டலுக்கு அமைய பாடசாலைகளை ஆரம்பிப்பது அவசியமாகும்.இதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்காக உலகளாவிய ரீதியில் எடுக்கப்படுகின்றன நடவடிக்கைகள் பற்றி ஜனாதிபதி தலைமையிலான கொரோனா வைரஸ் (கொவிட் 19) பரவலை தடுப்பதற்கான செயலணி தொடர்ந்தும் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.இதுவரை 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது என்றும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...