கண்டியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நடவடிக்கை!

Date:

கண்டியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க தொடங்கப்பட்ட கெட்டம்பே மேம்பாலத்தின் கட்டுமானத்தை துரிதப்படுத்துமாறு ஆளுங் கட்சியின் பிரதம கொறடாவும் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கண்டியில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக ஹங்கேரி குடியரசின் நிதியுதவி பெற்ற கெட்டம்பே மேம்பாலத்தின் கட்டுமானத்தை துரிதப்படுத்துமாறு ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவும் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ திட்ட பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

கெட்டம்பேயில் மேம்பாலம் அமையப்பெறுவதால் பேராதனை – கண்டி வீதியில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்றும் அதே நேரத்தில் 18 வீதிகள் அடையாளம் காணப்பட்டு அகலப்படுத்தப்பட்டு கண்டியில் போக்குவரத்து நெரிசலை போக்க திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.

கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் உள்ள முக்கிய வீதிகளில் தற்போது நிலவும் போக்குவரத்து நெரிசலைத் குறைக்கும் நடவடிக்கையாக நெரிசலான பகுதிகளில் மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...