புத்தளம் வைத்தியசாலையில் இன்று காலை கொரோனா பரிசோதனைக்காக வருகை தந்தவர்களுக்கும் வைத்தியசாலை பாதுகாவலர் களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
குறித்த மோதல் சம்பவத்தில் காயமடைந்த நான்கு பேரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். குறித்த மோதல் வைத்தியசாலை பாதுகாவலர் களுக்கும் நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மிடையில் இடம்பெற்றுள்ளதாகவும் இச் சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.