சஹ்ரானுடன் தொடர்பை பேணி வந்த மற்றுமொரு நபர் கைது!

Date:

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த பிரதான சூத்திரதாரியான சஹ்ரானுடன் தொடர்பை பேணி வந்த குற்றச்சாட்டில் பொலன்னறுவை தம்பானை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் பயங்கரவாத குற்ற தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினரால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தொடர்ந்து முன்னெடுத்து வரும் விசாரணையின் போது குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த உவைஸ் சைபூல் ரகுமான் என்பவர் சஹ்ரானுடன் தொடர்பை பேணி வந்துள்ளார் என தெரிய வந்தததையடுத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை 8 ஆம் திகதி அவரது வீட்டில் வைத்து பயங்கரவாத குற்ற தடுப்பு பிரிவினர் கைது செய்து விசாரணைக்காக கொழும்புக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.குறித்த நபர் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...