சிறுவர்களுக்கான தடுப்பூசி வழங்கும் வேலைத் திட்டம் இன்று முதல் ஆரம்பம்

Date:

கொரோனா வைரஸ் (கொவிட் 19) பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் சிறுவர்களுக்கான தடுப்பூசி வழங்கும் வேலைத் திட்டம் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் இன்று (24) மேற்கொள்ளப்படவுள்ளது.

இன்று முதல் நாள் சுமார் 100 சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்க திட்ட மிடப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜி விஜேசூரிய தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த தடுப்பூசிய, முதலில் பல்வேறு நோய்கள் மற்றும் குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படும். தடுப்பூசி வழங்குவதற்கு முன்னர் அது தொடர்பாக அவர்களுக்கு தெளிவூட்டவும், குழந்தையின் பாதுகாவலரிடம் எழுத்துமூல அனுமதியைப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அத்துடன், குழந்தையின் பாதுகாவலரின் அனுமதியின்றி குழந்தைகளுக்கு ஒருபோதும் தடுப்பூசி வழங்கப்பட மாட்டாது. பல தாய்மார்கள் ஏற்கனவே தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், தடுப்பூசி நடவடிக்கைகள் விடுமுறை நாட்களிலும் அதே முறையில் மேற்கொள்ளப்படும். தம்மிடம் சிகிச்சைக்கு வரும் நோய்வாய்ப்பட்டுள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கும் திகதியை விசேட வைத்திய நிபுணர் குழந்தைகளின் பாதுகாவலருக்கு தெரியப்படுத்துவார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

விவாகரத்து மற்றும் முஸ்லிம் திருமணச் சட்டம் தொடர்பான இரண்டு தனிநபர் மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

இலங்கையின் தனிநபர் சட்டங்களை நவீனமயமாக்கும் நோக்கில், ஜனாதிபதி சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான...

கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில் ‘காஷ்மீர் ஒற்றுமை தினம்’ அனுஷ்டிப்பு

கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில் காஷ்மீர் ஒற்றுமை தினத்தை முன்னிட்டு கருத்தரங்கு...

கொழும்பில் நாளை முதல் விசேட போக்குவரத்து திட்டம்.

20 க்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெறும் காலப்பகுதியில்...

நாட்டின் சில பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின் 50 மி.மீ. இற்கும் அதிக மழைக்கு சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை, அம்பாந்தோட்டை...