சூடானின் தலை நகரமாகிய கார்ட்டூனில் இருந்து ராணுவ அதிகாரிகள் சிலரும் ராணுவ வீரர்களும் சேர்ந்து அரச அலுவலகங்களையும் சூடான் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிலையங்களையும் கைப்பற்ற முயற்சி செய்த சம்பவம் இன்று (21) பதிவாகியது.
இந்த முயற்சி முறியடிக்கப்பட்டதாக சூடான் ஆட்சி அமைப்பின் மூவர் மற்றும் சிவிலியன் கவுன்சில் உறுப்பினரான முகமது அலி பக்கி சுலைமான் தெரிவித்துள்ளார்.
எல்லாம் அமைதியாக உள்ளது இன்று காலை அரசு அலுவலகங்களையும் தொலைக்காட்சி நிலையத்தையும் கைப்பற்ற முயன்ற சில ராணுவ அதிகாரிகளும் ராணுவ வீரர்கள் சிலரும் கைது செய்யப்பட்டுள்ளனர் அவர்களிடம் தற்போது விசாரணை நடந்து வருகிறது என்று சுலைமான் கூறினார்.
சூடானில் நீண்ட நாள் சர்வாதிகாரியாக விளங்கிய ஓமார் அல் பஷீர் 2019 ஆம் ஆண்டு இராணுவ புரட்சியின் விளைவாக கைது செய்யப்பட்டார்.ராணுவம் மட்டும் சூடானை நிர்வாகம் செய்ய முன்வரவில்லை அதற்குப் பதிலாக ராணுவ சிவிலியன் கவுன்சில் ஒன்று அமைக்கப்பட்டது அந்த கவுன்சில் இப்பொழுது சூடானை நிர்வாகம் செய்து வருகிறது.
சூடானில் இராணுவ ஆட்சியில் இருந்து தப்பிய மக்கள் ராணுவ சிவிலியன் ஆட்சி கவுன்சில் நடவடிக்கைகளை ஆதரித்து செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.