ஜப்பான் நாட்டின் புதிய பிரதமராக ஆளும் சுதந்திர ஜனநாயகக் கட்சியின் முன்னாள் அமைச்சர் புமியோ கிஷிதா தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட யோஷிகிதா சுகா மேல் கரோனா தொற்று காலத்தில் அவருடைய செயல்பாடுகள் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து இந்த முறை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்திருந்தார்.இதனால் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் தேவை வந்ததால் தேர்தலை நடத்தினர். இதில் ஆளும் கட்சியைச் சேர்ந்தவரே பிரதமராக முடியும் என்பதால் சுதந்திர ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் புமியோ கிஷிதா போட்டியிட்டார்.அவரை எதிர்த்து மேலும் இருவர் போட்டியிட்டாலும் இத்தேர்தலில் 256 வாக்குகளைப் பெற்று புமியோ வென்றதால் ஜப்பானின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.