தாய்லாந்திடமிருந்து இலங்கைக்கு மருத்துவ உபகரணங்கள் அன்பளிப்பு!

Date:

வெளிநாட்டு அமைச்சில் நடைபெற்ற நிகழ்வில் கொழும்பிலுள்ள ரோயல் தாய் தூதரகத்தின் பொறுப்பாளரான தயாடத் கஞ்சனாபிபட்குலிடம் இருந்து வெளிவிவகார செயலாளர் ஜயநாத் கொலம்பகே மருத்துவ உபகரணங்களை நன்கொடையாகப் பெற்றுக் கொண்டார்.

நாடு முழுவதும் உள்ள கொவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கும் பொருட்டு, குறித்த நன்கொடை உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சின் செயலாளர் கலாநிதி. ஆர்.எம்.எஸ்.கே. ரத்நாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.

30 ஒட்சிசன் செறிவூட்டிகள், 02 வென்டிலேட்டர்கள், 108 ஒட்சிசன் தாங்கிகள், 62 ரெகுலேட்டர்கள் / கேனுலே செட்டுகள், 160 பல்ஸ் ஒக்சிமீட்டர்கள் மற்றும் 150 தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவை இந்த நன்கொடையில் உள்ளடங்கும். இந்த நன்கொடையானது, தாய்லாந்தின் வெளிநாட்டு உறவுகள் அமைச்சு, யுனெஸ்கெப் தாய்லாந்து, சொம்டெட் ஃப்ரா நயனசம்வர இந்த நன்கொடையில் ஃப்ரா சங்கராஜ் வட், போவோரனிவ்ஸ் விகாரை அறக்கட்டளை, தாய்லாந்தின் இலங்கை சங்கம், தாய் – இலங்கை வர்த்தக சபை மற்றும் கொழும்பில் உள்ள ரோயல் தாய் தூதரகம் ஆகியவற்றின் பங்களிப்புக்களை உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்கொடைகளை அனுப்புவதற்கான ஏற்பாடுகளை பேங்கொக்கில் உள்ள இலங்கைத் தூதரகம் ஒருங்கிணைந்து மேற்கொண்டதுடன், குறித்த நன்கொடை கட்டார் எயார்வேஸின் உதவியுடன் விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டது.

Popular

More like this
Related

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...

ஊடக சுதந்திரத்துக்கு நேரடி தாக்குதல்; காசா  ஊடகவியலாளர்களின் படுகொலையை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வன்மையாகக் கண்டிக்கிறது

அல் ஜஸீரா வலையமைப்புக்காக காசா விலிருந்து கடமையாற்றி வந்த சிரேஷ்ட செய்தியாளர்...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி...

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....