கொரோனா ஜனாஸாக்களை அடக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ள கிண்ணியா வட்டமடு மையவாடிக்கு அத்தியாவசியமான தேவைப்பாடுகளில் ஒன்றாக காணப்பட்ட 10 இலட்சம் பெறுமதியான LED மின்குமிழ்கள் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூபால் கிண்ணியா பிரதேச சபை தவிசாளர் கௌரவ நிகாரிடம் கடந்த செவ்வாய்கிழமை மாலை கையளிக்கப்பட்டன.
இம் மின்குமிழ்களை பெயர் குறிப்பிட விரும்பாத மூன்று குடும்பங்கள் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் ஊடாக அன்பளிப்பு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.