பொதுமக்கள் தொடர்ந்தும் மின் கட்டணத்தை செலுத்த தாமதிப்பதை அனுமதிக்க முடியாது -மின்சக்தி அமைச்சர்!

Date:

மின்சார விநியோகத்துக்கான கட்டணமாக இலங்கை மின்சார சபைக்கு கிடைக்க வேண்டிய சுமார் 44 பில்லியன் ரூபா, இன்னமும் கிடைக்கப் பெறாதுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.

எனினும், மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்களை அசெளகரியப்படுத்த இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என நேற்று (16) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை தெரிவித்தார்.

தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக பலர் தங்கள் மின்கட்டணங்களை செலுத்தத் தவறியுள்ளதாகவும், இவ்வாறு கட்டணம் செலுத்தாதவர்களின் மின்சாரத்தை துண்டிக்க அரசாங்கம் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.எனினும், பொதுமக்கள் தொடர்ந்தும் மின் கட்டணத்தை செலுத்த தாமதிப்பதை அனுமதிக்க முடியாது என்றும் அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.ஆயினும், தொடர்ந்தும் இதனை மேற்கொள்ளாமல் இருக்க முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும்...

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...