மறைந்தும் மனதில் வாழும் மா மனிதர் A.C.S.ஹமீட்

Date:

அக்குரணையில் பிறந்து, ஹாரிபத்துவ தொகுதி மக்கள் மனதில் வாழ்ந்து, முழு உலகமும் வியக்க வைக்கும் ஒரு தலைசிறந்த அரசியல் ஞானியாக திகழ்ந்து, தொடர்ந்து 39 வருடங்கள் பாராளுமன்றத்தை மக்கள் பிரதிநிதியாக அழங்கரித்த, ஒரு அரசியல்வாதி அல்ல ஒரு அரசியல் ஞானி காலம் சென்ற முன்னாள் அமைச்சர் A C S ஹமீட் அவர்கள் மறுமை வாழ்வை ஆரம்பித்த நாள் 1999.09.03 இன்றுடன் 22வருடங்கள் பூர்த்தி ஆகிரது.
ஒரு மனிதனுடைய பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும். A C S ஹமீட் ஒரு சரித்திரம்.

நீங்களும் இந்த நல்ல மனிதனுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.
இவர் சிறந்த தீர்க்கதரசி. இவரிடம் சிறந்த அரசியல் ஞானம் இருந்தது‌. எதிர் காலம் பற்றிய எதிர்வு கூறும் ஆற்றல் இருந்தது.
ஹாரிஸ்பத்துவ தொகுதியை 3 பிரதேச நிர்வாக அலகுகளாக பிரித்து எடுத்தது இவருடைய சிந்தனையின் மூலம் உருவான தனி முயற்சி.

அன்று ஹாரிஸ்பத்துவ,பூஜாபிடிய, அக்குறணை என்ற பிரதேச சபைகள் உருவானது அவருடைய தனித்துவமான சிந்தனை மூலம் உருவானது.
இன்றைய காலகட்டத்தில் இது போன்று சிந்தனைக்கே இடம் இல்லை .ஹமீட் அவர்களின் தீர்க்க தரிசனம் பற்றி நிறைய தகவல்களை தரலாம்‌. நேரம் இடம் தராது‌.
எல்லா வற்றையும்விட இவரிடம் இருந்த மிகப்பெரிய பண்பு குணம் பனிவு.இவரை மேலும் மேலும் உயர்த்தியது இவருடைய பனிவு தான் என்றால் மிகையாகாது. பதவி பட்டங்கள் இவரை மாற்ற வில்லை உள்ளுர் தலைவர்களும் சரி வெளி ஊர் தலைவர்களும் சரி இவரை புகழ்ந்து புகழ்பாடும் போதெல்லாம் இந்த பேருக்கும் புகழுக்கு உரித்தானவன் அல்லாஹ் என்றும் இந்த பேருக்கும் புகழுக்கும் சொந்தகாரர்கள் அக்குறணை மக்கள் என்று வாய் நிறைய வஞ்சகம் இல்லாமல் வாய் நிறைய சொல்வார்.

என்னை ஏனியில் ஏற்றி யானையில் அமரச் செய்தது அக்குறணை மக்கள் எனவே எனது குடும்பம் முழுவதும் உங்களுக்கு கடன் என்று சென்ன மா மனிதர் A C S ஹமீட்.(முதன் முதலில் இவர் தேர்தலில் ஏணி சின்னம் பின்னர் தான் யானை சின்னம் கிடைத்தது) எல்லா புகழும் இறைவனுக்கே எல்லா புகழ்ச்சியும் அக்குரணை மக்களுக்கே என்று வாழ்ந்து மறைந்து மறுமை வாழ்வை 22 வருடங்களாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்‌.

பிரதேச சபை உறுப்பினர் A R M ஸரூக்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...