அம்பாறை மாவட்டத்தில் பெரும் போகத்தில் 89,200 ஹெக்டேயரில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட விவசாய பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
கல்லோயா நீர்த்தேக்கத் திட்டத்தின் வலது கரை, இடது கரை வாய்க்கால்கள் மற்றும் சிறுகுளங்கள் மூலம் நீர் வழங்கப்படும் காணிகளிலும், மழையை நம்பி செய்கை பண்ணப்படும் காணிகளிலும் உற்பத்தி மேற்கொள்ளப்படுகின்றன.இதேவேளை சேதனப்பசளை பயன்பாடு பற்றி விவசாயிகளுக்கு தெளிவு படுத்தப்பட்டு வருவதாகவும் மாவட்ட விவசாய பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)