அவசியமற்ற நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது | பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

Date:

கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறி நிகழ்வுகளை நடத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகப் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு அமைவாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் சுகாதார வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும், பிற்போடப்பட்ட நிகழ்வுகளை நடத்துவதற்கான அனுமதியை பெறுவதற்கு நாளாந்தம் மக்கள் பொது சுகாதார காரியாலங்களுக்கு பிரவேசிப்பதாக அந்தச் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

அவசியமற்ற எந்தவொரு நிகழ்வுகளுக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது.
அத்துடன், சுகாதார வழிகாட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கைக்கு மேலதிகமாகத் திருமணங்கள் மற்றும் மரண வீடுகளில் பொதுமக்கள் ஒன்று கூடினால், அதனுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...