ஆர்யன் கான் உள்பட மூன்று பேருக்கு பிணை மறுப்பு

Date:

போதைப் பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது மகன் ஆர்யன் கானை, நடிகர் ஷாருக் கான் இன்று காலை 10 நிமிடங்கள் சந்தித்துப் பேசினார்.

மும்பை: போதைப் பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில், பிரபல நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் கைதுசெய்யப்பட்டு சிறைக்காவலில் உள்ளார். மும்பை ஆர்தர் ரோடு சிறைச்சாலையில் தற்போது ஆர்யன் கான் வைக்கப்பட்டுள்ளார்.இதையடுத்து, ஆர்யன் கான் தரப்பு பிணை கேட்டு சிறப்பு நீதிமன்றத்தை அணுகிய நிலையில், ஆர்யன் கானின் பிணை மனுவை நீதிமன்றம் நேற்று (அக். 20) நிராகரித்தது.இந்நிலையில், ஆர்தர் ரோடு சிறைச்சாலையில் உள்ள ஆர்யன் கானை, அவரது தந்தையும், பிரபல நடிகர் ஷாருக்கான் இன்று (அக். 21) சந்தித்து பேசினார்.

இதற்காக காலை 9 மணிக்கெல்லாம் ஷாருக்கான் சிறைக்கு வந்திருந்தார், அங்கிருந்து பாதுகாப்புடன் சிறைக்குள் சென்ற அவர் ஆர்யன் கானை சந்தித்து 10 நிமிடங்கள் பேசினார். தொடர்ந்து அவர் 9.35 மணிக்கு அங்கிருந்து வெளியேறினார்
அப்போது அவர் சோகத்துடன் காணப்பட்டார். ஆர்யன் கான் பிணை மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து, ஆர்யன் கான் தரப்பு மும்பை உயர் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகக் கூறப்பட்டது. மேலும், ஆர்யன் உள்பட மூன்று பேருக்கு பிணை மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...