இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 52 ஆவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 04 ஓட்டங்களால் வெற்றி!

Date:

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 52 ஆவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 04 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் ரோயல் செலேஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்குமிடையிலான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ரோயல் செலேஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 141 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.அணிசார்பில் அதிகபடியாக ஜேசன் ரோய் 44 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் ரோயல் செலேஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஹர்ஷல் படெல் 33 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.இந் நிலையில், 142 என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய ரோயல் செலேஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 137 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.

அணிசார்பில் அதிகபடியாகத் தேவ்தத் படிக்கல் 41 ஓட்டங்களையும், க்ளென் மெக்ஸ்வெல் 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.பந்துவீச்சில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உம்ரான் மாலிக் 21 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பல மாவட்டங்களுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என இயற்கை...

க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை மேலதிக வகுப்புகளுக்கு தடை

2025ம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 17ம் திகதி...

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தால் 1.9 பில்லியன் ரூபா ஒதுக்கீடு!

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு ஜனாதிபதி...

எம்.பிக்களுக்கான ஓய்வூதியங்களை நீக்கும் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணாக அமையவில்லை: உயர்நீதிமன்றம் அறிவிப்பு!

அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரைக்கு இணங்க, பாராளுமன்ற ஓய்வூதியங்கள் (நீக்குதல்)  எனும்...