இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதி

Date:

இந்திய முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவருமான 89 வயதான மன்மோகன் சிங், உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றது. நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது, அவரின் அமைச்சரவையில் நிதியமைச்சராகப் பதவிவகித்த மன்மோகன் சிங், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த ‘தாராளமயமாக்கல்’ கொள்கைகளை அறிமுகப்படுத்தி பொருளாதாரச் சீர்திருத்தத்துக்கு வித்திட்டார். அரசியலில் பெரிய அளவில் ஈர்ப்பு இல்லாதவராக இருந்த மன்மோகன் சிங், 2004-ல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்ததும் திடீர் பிரதமரானார். ஆனால், அதற்குப் பின்னர் தொடர்ந்து 10 ஆண்டுகள், மன்மோகன் தன் பெயரை வரலாற்றின் பக்கங்களில் அழுத்தமாகப் பதிவு செய்தார். அதற்குப் பின்னர், 2014-ல் பாஜக மத்தியில் ஆட்சியைப் பிடித்தது. என்றாலும், இதுவரையிலும் பொருளாதாரரீதியாக மத்திய அரசுக்குத் தொடர்ந்து தனது ஆதரவையும், ஆலோசனைகளையும் வழங்கிவருகிறார். 2019-ம் ஆண்டு முதல் மாநிலங்களவை உறுப்பினராகவும் அவர் பதவி வகித்துவருகிறார்.

முன்னதாக, மன்மோகன் சிங் கடந்த ஆண்டு, ஏப்ரல் மாதம் கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். 2009-ல் ஏற்கெனவே, அவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இதயவியல் துறையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். நேற்று முன்தினம் முதலே மன்மோகன் சிங்குக்குக் கடுமையான காய்ச்சல் இருந்துவந்ததாகவும், நேற்றைய தினம் திடீர் மூச்சுத்திணறலும் நெஞ்செரிச்சலும் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

சிகிச்சை பெற்றுவரும் அவரின் உடல்நிலை குறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “காய்ச்சல் காரணமாக அவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தற்போது அவரின் உடல்நிலை சீராக இருக்கிறது. தொடர்ந்து, மருத்துவர்கள் அவரை கண்காணித்துவருகின்றனர்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Popular

More like this
Related

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...