இன்று முதல் திருமண நிகழ்வில் பங்கேற்போர் எண்ணிக்கையின் வரையறை

Date:

இன்று வெள்ளிக்கிழமை (15) முதல், திருமணங்கள், இறுதிச் சடங்குகள், உணவகங்கள், கூட்டங்கள், கருத்தரங்குகளுக் கான சுகாதார வழிகாட்டுதல்கள் மேலும் தளர்த்தப்படுகின்றன.
புதிய தளர்வுகளுடனான சுகாதார வழிகாட்டலை நேற்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெளியிட்டார்.
அதனடிப்படையில், திருமண மண்டபத்தில் அனுமதிக்கப் படும் நபர்களின் எண்ணிக்கை 25 சத வீதம் வரை மட்டுப்படுத் தப்பட்டுள்ள அதேவேளை, அதிகபட்ச நபர்களின் எண்ணிக்கை 50ஆக வரையறுக் கப்பட்டுள்ளது. திருமண மண்டபத்தில் மதுபான பாவனைக்கு விதிக்கப்ட்ட தடை தொடரும். அனைத்து திருமணங்களும் பதிவுத் திருமணங்களாக மாத்திரமே நடத்த முடியும்.
இறுதிச்சடங்கில் ஒரே நேரத்தில் கலந்து கொள்ளக் கூடியவர்களின் எண்ணிக்கை, 15ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், விளையாட்டு நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், உணவ கங்களில் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப 30 வீதம் வரையானவர்கள் அமர்ந்திருந்து உணவருந்த முடியும். மதுபானத் துக்கான தடை தொடரும். இதேவேளை, கூட்டங்கள், பயிலரங்குகள், கருத்தரங்குகள் போன்றவற்றை அதிகபட்சமாக 50 பேரைக் கொண் டதாக மண்டபத்தில் நடத்தலாம்.
நிதி நிறுவனங்கள் (வங்கிகள், அடகு வைக்கும் மையங்கள்): ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உள்ளே 5 நபர்களுக்கு மட்டுப்படுத்தப்பட வேண்டும். மீதமுள்ள வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியைக் காத்து வெளியே வரிசையில் நிற்க வேண்டும்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...