இன்று (20) திகதி இந்தியாவின் குஷிநகர் சர்வதேச விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளதையடுத்து. குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தில் முதலாவதாக இலங்கை விமானம் தரையிறங்கவுள்ளது.
புத்தபெருமான் மஹாபரிநிர்வாண நிலையினை அடைந்த இடமாக குஷிநகர் உள்ளது.2020 செப்டெம்பர் 26 ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனான மெய்நிகர் இருதரப்பு மாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடி குஷிநகருக்கான முதலாவது சர்வதேச விமான சேவையானது இலங்கை யாத்திரிகர்கள் குழுவுக்கானதாக அமைய வேண்டும் என அறிவித்திருந்தார்.
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர், அபிவிருத்திக் கூட்டிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சர் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தலைமையிலான இலங்கையைச் சேர்ந்த பேராளர்கள் குழு இந்த அங்குரார்ப்பண விமானசேவையில் பயணிக்கவுள்ளது.
இன்று அதிகாலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து 100 பிக்குகளுடன் இந்த விசேட விமானம் குஷிநகர் நோக்கி பயணத்தை ஆரம்பித்தது.
Yet another historic milestone for #indolanka relations as 100 Buddhist monks embark on the inaugural flight to #Kushinagar on the invitation of HE @narendramodi for the opening of the Kushinagar International Airport! @IndiainSL pic.twitter.com/r2g9QxLvKC
— Namal Rajapaksa (@RajapaksaNamal) October 19, 2021