ஐ.பி.எல் தொடரிலிருந்து வெளியேறியது ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர்!

Date:

ரோயல் செலெஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான இன்றைய வெளியேறல் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

2021 ஐபிஎல் தொடரின் வெளியேறல் சுற்றில் (எலிமினேட்டர்) புள்ளிப்பட்டியலில் 3, 4 ஆம் இடங்களைப் பெற்ற ரோயல் செலேஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் ஆகிய அணிகள் இன்று மோதின.

ஷார்ஜாவில் இடம்பெற்ற இன்றைய போட்டியில் முதலில் துடுப்பாடிய ரோயல் செலெஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 138 ஓட்டங்களை பெற்றது.இந் நிலையில், 139 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி, 19.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

அதற்கமைய, எதிர்வரும் 2 ஆவது தகுதிகாண் போட்டியில் டெல்லி கெப்பிட்டெல்ஸ் அணியை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி சந்திக்கவுள்ள அதேவேளை, தோல்வியை தழுவிய ரோயல் செலெஞ்சர்ஸ் பெங்களூர் அணி போட்டியை விட்டு வெளியேறியது.

முதலாவது தகுதி காண் போட்டியில் டெல்லி கெப்பிட்டல்ஸை தோற்கடித்த சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது.இந் நிலையில், இரண்டாவது தகுதி சுற்றில் வெற்றிபெறும் அணி, இறுதிப்போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்தாடும்.

 

இன்றைய போட்டியின் துடுப்பாட்ட, பந்துவீச்சு எண்ணிக்கை சுருக்கம்.

துடுப்பாட்ட சுருக்கம்

ரோயல் செலலெஞ்சர்ஸ் பெங்களூர்

விராட் கோலி 39 ஓட்டங்கள்

தேவ்தத் படிக்கல் 21 ஓட்டங்கள்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

சுப்மன் கில் 29 ஓட்டங்கள் வெங்கடேஸ் ஐயர் 26 ஓட்டங்கள் சுனில் நரைன் 26 ஓட்டங்கள்

பந்து வீச்சு சுருக்கம்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

சுனில் நரைன் 21 – 4

லோகிபெர்கியூஸன் 30-2

ரோயல் செலெஞ்சர்ஸ் பெங்களூர்

மொஹமட் சிராஜ் 19-2

ஹர்ஷல் பட்டேல் 19-2

யுஷ்வேந்தர் சஹல் 16-2

 

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...