கண்டி வரலாற்று சிறப்பு மிக்க மல்வத்து மகா விகாரைக்கு எதிர் கட்சித் தலைவர் விஜயம்!

Date:

கண்டி வரலாற்று சிறப்பு மிக்க மல்வத்து மகா விகாரைக்கு இன்று (29)  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சென்றுள்ளார்.இதன்போது ஷ்யமோபாலிமகா நிகாயவின் மல்வத்து மகா விகாரையின் பீடாதிபதி வணக்கத்துக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல மகாநாயக்க தேரரைச் சந்தித்து ஆசிர்வாதங்களை பெற்றுக்கொண்டார்.

நாட்டில் தற்போது விவசாய சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உள்ளிட்ட தற்போதைய பல பிரச்சினைகள் குறித்து இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.

இந் நிகழ்வில் எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல, பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன, தலதா மாளிகையின் முன்னாள் தியவதன நிலமே நெரஞ்சன் விஜயரத்ன உட்பட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது: ஈரான் திட்டவட்டம்

போர் நிறுத்தம் தொடர்பாக, அமெரிக்காவுடன் எந்தவிதமான சமரசப் பேச்சுவார்த்தையும் நடத்தப்போவதில்லை என...

அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுச் சதிக்கு எதிராக தமிழகத்தில் வெடித்த எதிர்ப்பு: அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஓரணியில்!

இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலால் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி...

உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி...

எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் காரணமாகக் கொண்டு,...