கரிம உரத் திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு இழப்பீடு

Date:

கரிம உரத் திட்டத்தால் விவசாயி பாதிக்கப்பட்டால், அதற்காக இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அறுவடை குறைந்து ஏதேனும் நட்டம் ஏற்பட்டால், இந்த ஆண்டின் இறுதியில் அது தொடர்பாக மதிப்பீட்டுக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சருமான ரமேஷ் பாத்திரண தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் ​நேற்று (06) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில், கரிம உரத் திட்டம் தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கரிம உரத்தின் தரக் குறைவு காரணமாக அதனை இறக்குமதி செய்வதை நிறுத்துவது தொடர்பாக, சீனத் தூதுவர் வெளியிட்ட அறிக்கை குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியபோது, ​​எந்த நாட்டிலிருந்தும் தரமற்ற உரங்களை இறக்குமதி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது. உயர்தரமான உரங்கள் மாத்திரமே இறக்குமதி செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றம்

ஒரு கிலோ மீட்டருக்கான முச்சக்கர வண்டி கட்டணத்தை 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அநீதியான கைது: உச்ச நீதிமன்றத்தில் மாவனல்லை இளைஞருக்குக் கிடைத்த நீதி.

மாவனல்லைப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய முகமது ரிஃபாய் முகமது சுஹைல்...

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு!

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின்...

பாகிஸ்தானின் 86-வது தேசிய தினம்: இலங்கையில் விமரிசையான கொண்டாட்டம்!

இலங்கையில் வாழும் பாகிஸ்தானிய சமூகம் மற்றும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் பாகிஸ்தானின்...