கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருதய சத்திரசிகிச்சை மீண்டும் ஆரம்பம்!

Date:

கொழும்பு தேசிய வைத்தியசாலையில், கொவிட் தொற்று நோய் காரணமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருதய சத்திர சிகிச்சை (பைபாஸ்) அடுத்த வாரம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சந்தன கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த நாட்களில், இருதய சத்திரசிகிச்சைக்காக (பைபாஸ்) காத்திருக்கும் பட்டியலில் உள்ள நோயாளிகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சத்திர சிகிச்சைக்கு தயாராகும் வகையில் சத்திர சிகிச்சை அறைகள் கிருமி நீக்கம் செய்யப்படுவதாக வைத்தியர் கஜநாயக்க கூறினார்.

அத்துடன், கொழும்பு தேசிய வைத்தியசாலையில், இரண்டு சத்திர சிகிச்சை அறைகளில், தினமும் சுமார் 5 இருதய சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி இருதய சத்திர சிகிச்சைக்காக (பைபாஸ்) காத்திருக்கும் பட்டியலில் உள்ள நோயாளர்களை அவசரமாக சத்திர சிகிச்சைக்கு உட்படுத்த முடியும் என்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

‘தொழில்நுட்ப ஜாம்பவான்கள் குறைக்கட்டும்’: சமூக வலைதளத் தடையை எதிர்க்கும் எலான் மஸ்க்கிற்கு ஸ்பெயின் பிரதமர் பதிலடி.

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் ஸ்பெயின்...

வரலாற்றில் முதன்முறையாக புதிய பெண் பஸ் நடத்துனர்களுக்கு நியமனம்

இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட 20 பஸ் நடத்துனர்களுக்கான நியமனங்களை...

எங்களுக்குத் தேவையற்ற கூடுதல் பாலின அடையாளங்கள் தேவையில்லை. ஹங்கேரி பிரதமர்.

பாலின அடையாளம் மற்றும் பாரம்பரிய குடும்ப விழுமியங்கள் குறித்த விவாதத்தில், ஹங்கேரி...

பல மாவட்டங்களுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என இயற்கை...