தனிமைப்படுத்தல் ஊரடங்கு தளர்த்தப்பட்டது!

Date:

தனிமைப்படுத்தல் ஊரடங்கு இன்று (01) அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளது. இதற்கமைய ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

வழிகாட்டல்கள் இதோ,

அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு தேவைகளுக்காக மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துத்துக்கான தடை தொடர்ந்து அமுலாகும்.

இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரை அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரமே வெளியே செல்ல முடியும். சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளுக்கு அமைவாக பொதுப் போக்குவரத்து வாகனங்களில் பயணிக்க முடியும்.

ஆசன எண்ணிக்கையின் அளவுக்கு அமைவாக பயணிப்பதற்கு மாத்திரமே அனுமதி.பொது போக்குவரத்தின் போது குளிரூட்டப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்த முடியாது.

அனைத்து சந்தர்ப்பங்களிலும் முகக்கவசத்தை அணிந்திருந்தல் வேண்டும்.நிறுவனங்களுக்கு வரும் பணியாளர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த வேண்டும்.

வீடுகளில் இருந்து வேலை செய்யுமாறு பணியாளர்களை ஊக்குவிப்பது அவசியம். இது அத்தியாவசிய சேவைகள் சார்ந்த நிறுவனங்களுக்கு ஏற்புடையது அல்ல.கடமைக்காக அழைக்க வேண்டிய பணியாளர்களின் எண்ணிக்கையை நிறுவனத் தலைவர் தீர்மானிக்கலாம்.

வைபவங்கள்மற்றும் மக்கள் ஒன்றுகூடும் விதத்திலான நிகழ்வுகளுக்கு ஒக்டோபர் 31 ஆம் திகதி வரை அனுமதியில்லை.பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கு அனுமதியில்லை.

வீடுகளிலோ, வெளியிலோ விருந்துகள், வைபவங்கள், ஒன்றுகூடல்களை நடத்த முடியாது.

திறந்தவெளிச் சந்தைகள், வாராந்த சந்தைகள் போன்றவற்றை பிரதேச சுகாதர மருத்துவ அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் நடத்தலாம்.

கடைகள், சில்லறை விற்பனை நிலையங்கள், மருந்தகங்கள் போன்றவற்றில் சனநெரிசல் இல்லாத வகையில் பணிகளை முன்னெடுக்க வேண்டும்.

வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் ஒரு சந்தர்ப்பத்தில் உள்ளே 5 பேர் மாத்திரமே இருக்க முடியும் என்பதுடன் ஏனைய வாடிக்கையாளர்கள் நிறுவனத்திற்கு வெளியே 1 மீட்ட இடைவெளியை பேணி வரிசையில் நிற்க வேண்டும்.

சிகையலங்கார நிலையங்களில் வாடிக்கையாளர்கள் தமக்கான நேரத்தை முற்கூட்டியே ஒதுக்கிக் கொள்ள வேண்டும்.

திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும்.

இதேவேளை, பாடசாலைகளைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சுகாதார அமைச்சின் தீர்மானத்திற்கு அமைய, ஆரம்பத்தில் 200 க்குக் குறைவான மாணவர்களுடன் கூடிய பாடசாலைகள் திறக்கப்படும். அவை திறக்கப்படும் திகதி பின்னர் அறிவிக்கப்படும்.

முன்பள்ளிகளை மொத்த மாணவர்களின் எண்ணிக்கையில் அரைவாசிப்பேருடன் இயங்க வைக்கலாம்.

தனியார் வகுப்புக்களுக்கு அனுமதியில்லை.

சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய நீதிமன்றங்கள் இயங்க அனுமதி.

மதவழிபாட்டுத் தலங்களில் கூட்டுப் பிரார்த்தனைகள், ஒன்றுகூடல் போன்றவற்றிற்கு அனுமதியில்லை.திருமண பதிவிற்காக ஒக்டோபர் 15 ஆம் திகதி வரை 10 பேருக்கும் ஒக்டோபர் 16 ஆம் திகதியிலிருந்து 31 ஆம் திகதி வரை 50 பேருக்கும் அனுமதி.

மரணச் சடங்குகளில் 15 ஆம் திகதி வரை 10 பேருக்கும் ஒக்டோபர் 16 ஆம் திகதியிலிருந்து 31 ஆம் திகதி வரை 15 பேருக்கும் அனுமதி பூதவுடல் விடுவிக்கப்பட்டு 24 மணிநேரத்திற்குள் இறுதிக் கிரியைகளை நிறைவேற்ற வேண்டும்.

உடற்பயிற்சி ஒழுங்கைகள், கடற்கரையோரங்களில் நடமாட மக்களுக்கு அனுமதி உண்டு. இருந்தாலும், 15 ஆம் திகதி வரை விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது. சகல சந்தர்ப்பங்களிலும் பொதுமக்கள் சுகாதார விதிமுறைகளை அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும் என சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.அவ்வாறு அனுசரிக்கத் தவறும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கலாம் எனவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...