யாழ்ப்பாண மக்களின் குடிதண்ணீர் பிரச்சினைகளுக்குத் தீர்வாக நயினாதீவில் கடல் நீரை சுத்திகரித்து குடிநீராக் கும் நிலையத்தை திறந்து வைத்த பிரதமர், யாழ்ப்பாணம் நகர குழாய் மூலமான நீர் விநியோக அமைப்பு, தாளை யடி கடல் நீர் சுத்திகரிப்பு ஆகிய திட்டப் பணிகளையும் ஆரம்பித்து வைத்தார்.
கொழும்பு அலரி மாளிகையிலிருந்து மெய்நிகர் தொழில்நுட்பம் ஊடாக இந்தத் திட்டங்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பித்து வைத்தார்.இதன்போது அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவும் பிரதமருடன் இணைந்திருந்தார்.
யாழ்ப்பாணம் – கிளிநொச்சி நீர் வழங்கல் திட்டம் ஊடாக, 186 கிராம அலுவலர் பிரிவுகளுக்கு, பாதுகாப்பான குழாய் நீரை விநியோகிப்பதற்கு எதிர்பார்ப்பதுடன், மத்திய அரசாங்கத்தின் நிதி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியின் கீழ், இந்தத் திட்டம் செயற்படுத்தப்படும்.
தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஊடாக, உயர் தொழில்நுட்ப நீர் சுத்திகரிப்பு தொழில்நுட்பத்துடன், கடல் நீரை சுத்தமான குடிநீராக மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் மற்றும் யாழ். நகர நீர் வழங்கல் திட்டத்தின்,பாதுகாப்பான நீர் குழாய்களை பொருத்துவதன் மூலம், சுமார் 3 இலட்சம் மக்கள்
நன்மை அடைவதுடன், திட்டங்களை 2023 ஆம் ஆண்டளவில் நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய வேலைத் திட்டங்களின் மூலம், யாழ்ப்பாண நகரம் மற்றும் அதனை அண்மித்து வாழும், சுமார் 12 இலட்சம் மக்களுக்கு, குழாய் மூலமான
பாதுகாப்பான குடிதண்ணீரை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.
மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்ட, நயினாதீவு கடல் நீர் சுத்திகரிப்புநிலையத்தின் ஊடாக நயினாதீவு, அனலைதீவு, எழுவைதீவு மக்களுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்படவுள்ளது.
இதன் மூலம் சுமார் 5 ஆயிரம் குடும்பங்கள் நேரடியாக நன்மையடைகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


