நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மீண்டும் டெங்கு நோய் பரவல் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இந்த வருடத்தில் இதுவரையில் 21,154 டெங்கு நோயாளர்கள் இணங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு அறிவித்துள்ளது.அத்தோடு இந்த வருடத்தில் 10 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளது.அத்தோடு மேல் மாகாணம், கண்டி, பதுளை, இரத்தினபுரி, குருநாகல், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.