ராகலை பகுதியிலுள்ள வீடொன்றில் பரவிய தீயினால் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 1 மற்றும் 11 வயது குழந்தைகளும் அடங்குவதாக தெரியவருகின்றது.
மேலும், உயிரிழந்தவர்களின் இரண்டு பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தீப்பரவலுக்கான காரணம் உள்ளிட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.