பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் படிப்படியாக ஆரம்பிக்கப்படும்!

Date:

கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொண்டதன் மூலம் மாணவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களை திறந்து மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் படிப்படியாக ஆரம்பிக்கப்படும் என கொழும்பு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் சந்திரிகா விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

20 முதல் 30 வயதிற்குட்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நேற்று (11) ஆரம்பிக்கப்பட்டன.பல்கலைக்கழக மாணவர்களில் 11 வீதமானவர்கள் இதுவரை தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளனர். கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொவிட் தடுப்பு மருந்தின் இரண்டாவது டோஸ் இன்று வழங்கப்படுகின்றது.

பல்கலைக்கழக மாணவர்களில் பெரும்பாலானோர் சைனோபார்ம் தடுப்பூசியை பெற்றுள்ளனர். எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை அருகில் உள்ள பல்கலைக்கழகங்களுக்குச் சென்று, மாணவர்கள் கொவிட் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இலங்கைக்கு வழங்க தயார்: ஈரான் தூதுவர்!

இலங்கையுடனான இருதரப்பு உறவில் ஈரானின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ள இலங்கைக்கான ஈரான்...

எரிபொருள் விலை உயர்வால் பேக்கரி உற்பத்தி பொருட்கள் அதிகரிக்கும் சாத்தியம்!

தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை உயர்த்துவதா...

விசேட வைத்திய நிபுணர்களுக்கு மேலதிக எரிபொருள் வழங்க நடவடிக்கை!

தொலைதூரப் பகுதிகளில் இருந்து வருகை தரும் விசேட வைத்திய நிபுணர்களுக்கு மேலதிக...

பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!

பேருந்துக் கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவு இன்று (23) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அண்மைய...