பாடசாலை அதிபர்களுக்கான “Mini-MBA” பாடநெறியை ஸம் ஸம் நிறுவனம் அங்குரார்ப்பணம் செய்துள்ளது!

Date:

நமது நாட்டில் சமூக சேவையில் பிரபலம் பெற்று விளங்குகின்ற ஸம் ஸம் நிறுவனத்தின் ஏற்பாட்டில் கல்வித்துறையில் கடமையாற்றும் அதிகாரிகள்,பாடசாலை அதிபர்கள், உப அதிபர்கள் என தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான “Mini MBA” பாடநெறியின் அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த 23 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்றது.

 

இப் பாடநெறி சிங்களம் மற்றும் தமிழ் மொழிமூலம் ஒரு வருடகாலத்திற்கு நடைமுறைக் கல்வியை மையப்படுத்தி நிபுணத்துவ உள்ளீட்டுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.“மினி-எம்.பி.ஏ” என்பது வணிக நிர்வாகத்தின் அடிப்படைகளை மையமாகக் கொண்ட கல்விசார் அல்லாத, நிர்வாகப் பயிற்சித் திட்டமாகும். இந்தத் திட்டம் வணிகத்தைப் பற்றிய அறிமுக வழங்குவதோடு மாணவர்கள் மற்றும் தொழில்வாண்மையாளர்களை தேடலுக்குத் தயார்படுத்துவதோடு இத்துறை பற்றிய அடிப்படைப் புரிதலை வழங்க முற்படுகிறது.

இலவசமாக வழங்கப்படும் இப் பாடநெறிக்கு மத்திய மாகாணக் கல்வித் திணைக்களத்துடன் இணைந்து போட்டித் தேர்வு மூலம் அதிபர்கள் தெரிவு செய்யப்பட்டதோடு முன்னோடித் திட்டமான இம் முயற்சி, கல்வித் துறையில் எதிர்காலத் தலைவர்களை வளர்க்கும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்படுகிறது.

இந் நிகழ்வில் கெளரவ நீதி அமைச்சர் அலி சப்ரி, பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர். ரஞ்சித் பண்டார, மத்திய மாகாண கல்வித் துறை பணிப்பாளர் திரு. அமரசிரி பியதாச , மேலதிக பணிப்பாளர்களான எம். ஸாருதீன் மற்றும் சம்பிகா மாயாதுன்ன, கலாநிதி. கல்கந்தே தம்மானந்த தேரர், அருட்தந்தை. ஆசிரி பெரேரா உட்பட சமூகத் தலைவர்கள், தனவந்தர்கள், நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

ஸம் ஸம் நிறுவனத்தின் தலைவர் முப்தி. யூசுப் ஹனிபா,சப்ரகமுவப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர்.எம். அஸ்லம் ஆகியோரும் இந் நிகழ்வில் உரை நிகழ்த்தினர்.

இத் திட்டம் நீண்ட கால அடிப்படையில் இலங்கையில் கல்வி நிருவாகிகளின் தரமான வளர்ச்சிக்கு பங்களிக்கும் என்பது ஸம் ஸம் நிறுவனத்தின் எதிர்பார்ப்பாகும்.

Popular

More like this
Related

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...

*பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் உச்சம்: கத்தார், சவூதி அரேபியாவின் தலையீடு!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் சுமார்...

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...