புதிய மாறுபாடு கொண்ட டெல்டா வகை வைரஸ் ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், புதிய உருமாறிய டெல்டா வகை வைரசான ஏ ஓய் 4 பாயின்ட் 2 என்ற புதிய வைரஸ் பல ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளில் இருந்து பரவியுள்ளதாகவும்,
இந்த வைரஸ் அதிகமாக பரவக்கூடியது என்பதற்கான தெளிவான அறிகுறி எதுவும் இல்லை என்றும் உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.ஆல்பா மற்றும் டெல்டா வகைகள் போன்ற பெரிய அச்சுறுத்தல் இல்லையென்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.