ஆப்கானிஸ்தான் காபூல் நகரில் பள்ளிவாசல் ஒன்றுக்கு அருகே குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இதில் பொதுமக்கள் பலர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
பள்ளிவாசலில் மக்கள் நுழையும் இடத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.