இலங்கைக்கு விஜயமொன்றிற்காக வந்துள்ள இந்திய இராணுவ தளபதி மனோஜ் முகந்த் நாராவன இன்று (13) ஜனாதிபதி கோட்டாபய ராஜபஷவை சந்திக்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சந்திப்பு இன்று 11.30 மணிக்கு இடம்பெறவுள்ளதோடு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரச அதிகாரிகளை சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இராணுவ தளபதி ஷவேந்திர சில்வாவின் அழைப்பை ஏற்று அவர் நேற்று (12) இலங்கை வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.