இன்று முதல் பேருந்துகள் சேவையில்!

Date:

அன்றாட நடவடிக்கைகளுக்காக இன்று முதல் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்று இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக சுவர்ணஹன்ச தெரிவித்துள்ளார்.

மாகாணங்களுக்குள் இந்தச் சேவை இடம்பெறும்.இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான 5,500 பஸ்கள் சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.சாரதிகள், நடத்துனர்கள் உட்பட தொழில்நுட்ப பிரிவில் கடமையாற்றுபவர்களின் விடுமுறைகள் ரத்துச் செய்யப்பட்டு அவர்களை பணிக்கு அழைக்கத் தீர்மானித்திருப்பதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய சேவை நிமித்தம் வேறு மாகாணங்களில் சேவையாற்றுபவர்களுக்கு போக்குவரத்து வசதி வழங்குவதற்கும் போக்குவரத்துச் சபை தயாராக உள்ளது.இதேவேளை, தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுமென தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரான கெமுனு விஜேவர்த்தன தெரிவித்தார்.தற்போதைய நிலையில் எந்தவொரு கட்டண மறுசீரமைப்புகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...