இலங்கையில் இன்று முதல் மாகாணங்களுக்கு இடையில் புகையிரத சேவைகளுக்காக 133 புகையிரதங்களை ஈடுபடுத்த ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும் இன்று முதல் பருவகால பயணச் சீட்டை கொண்டுள்ள பயணிகளுக்கு மாத்திரமே புகையிரத சேவைகள் இடம்பெறும் என்று ரயில்வே திணைக்கள பொதுமுகாயைமாளர் தம்மிக்க ஜயசுந்தர கூறினார்.
இன்று முதல் கொழும்புக்கு வரும் புகையிரதம் அளுத்கம, அவிசாவளை, அம்பேபுஸ்ச மற்றும் கொச்சிக்கடை வரையில் மாத்திரம் பயணிக்கும் என்று பொதுமுகாயைமாளர் தம்மிக்க ஜயசுந்தர மேலும் தெரிவித்தார்.இதேவேளை, பயணத் தடை காரணமாக கடந்த சில மாதகாலமாக இடைநிறுத்தப்பட்டிருந்த புகையிரதம் சேவை மாகாணங்களுக்குள் இன்று ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
எனினும், மாகாணங்களுக்கு இடையிலான புகையிரதம் சேவை இடம்பெறாது. மாகாணங்களுக்கு இடையிலான புகையிரதம் சேவை எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி மேலும் கூறினார்.