இன்று (21) முதல் மாணவர்களை ஏற்றிச் செல்லும் வேன் மற்றும் முச்சக்கர வண்டிகளை பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முச்சக்கர வண்டியில் இருவருக்கு மாத்திரமே பயணிக்க முடியும். இதேபோன்று வேனில் ஆசன எண்ணிக்கைக்கு ஏற்றவாறு பயணிக்க வேண்டும் எனவும், நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதலான மாணவர்களை ஏற்றிச் செல்லும் வேன் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
மேலும், வாகனங்களில் பயணிக்கும் அனைவரும் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும் எனவும் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.