நாட்டின் பல பகுதிகளிலும் இன்று (24) மழை செய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கிழக்கு, ஊவா, வட மத்திய, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேல் மற்றும் தென் கடலோர பகுதிகளில் இடியுடன் கூடிய மழையும் , மத்திய , சப்ரகமுவ, மேல் மற்றும் ஊவா மாகாணங்களில் பனிமூட்டமான காலநிலை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் இருப்பதால் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக் கூடிய பாதிப்புகளிலிருந்து பொது மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வளிமண்டலவியல் திணைக்களம்.