எரிபொருள் விலை அதிகரிக்கப்படாத காரணத்தால் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சுமார் 70 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக அந் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமத் விஜேசிங்க இதனைத் தெரிவித்தார்.எனவே, எரிபொருள் விலையை அதிகரிப்பதைத் தவிர இதற்கு வேறு வழியில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இது தொடர்பில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.