இந்தியாவிலிருந்து உர கொள்வனவு செயற்பாட்டில் 29 கோடி ரூபாவை , ஜனாதிபதி செயலாளர் பீ.பி ஜயசுந்தர அழுத்தங்களை பிரயோகித்து தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு வைப்பிலிட்டதாக குறிப்பிட்டு ” அருண” ஞாயிறு வாரவெளியீட்டில் வெளியான செய்தியானது உண்மைக்கு புறம்பானது என ஜனாதிபதி செயலாளர் பீ.பி ஐயசுந்தர தெரிவித்துள்ளார்.இதனை ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
இச் செய்தி குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி செயலாளர் பொலிஸ்மா அதிபரை கேட்டுக் கொண்டுள்ளதாகவும் குறித்த அறிக்கை தெரிவித்துள்ளது.